தமிழ்நாடு

பாஜக பிரமுகருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 

DIN

பாஜக பிரமுகருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ள சம்பவ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில துணைத் தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமாக ஏராளமான ஆம்னி பேருந்துகள் உள்ளன. இதில் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி வழியாக கோவைக்கு புறப்படுவதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு பத்து முப்பது மணி அளவில் ஒரு பேருந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே தயாராக நின்றது. 

அப்போது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மேம்பாலத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் திடீரென பேருந்தின் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளனர்.

இருப்பினும் பேருந்து புறப்பட்டு சென்றதால் பெட்ரோல் குண்டு சாலையில் விழுந்து தீப்பற்றியது.  பேருந்துக்கு எந்தவித சேதமும் ஏற்படாதால் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதில் இருந்த 30 பயணிகளும் பத்திரமாக கோவை புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தின் உரிமையாளர் விவேகம் ரமேஷ் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்தை திருநெல்வேலி சரக காவல் துணை தலைவர் பிரவேஸ்குமார், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துதை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

எண்ணூா் ஆலையை தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும்: தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

SCROLL FOR NEXT