முகப்பு
தமிழ்நாடு

வெளியான குஷி படத்தின் சென்சார் தகவல்: ரன்னிங் டைம் எவ்வளவு?

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 23 ஆகஸ்ட் 2023, 7:44 pm IST
பகிர்:

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஷிவ நிர்வாணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

சமீபத்தில் வெளியான குஷி படத்தின் டிரைலர், சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், குஷி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ரன்னிங் டைம் 165 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். குஷி திரைப்படம் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வரும் செப்.1 ஆம் தேதி திரைக்கு வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments