நெல்லூருக்கு 20 கி.மீ. தொலைவில் மிக்ஜம் புயல்
நெல்லூருக்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள மிக்ஜம் புயல் இன்னும் சற்றுநேரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: நெல்லூருக்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள மிக்ஜம் புயல் இன்னும் சற்றுநேரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் திங்கள்கிழமை முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெற்றது.
நேற்று பிற்பகல்வரை சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 90 கி.மீ. தொலைவு வரை நெருங்கி வந்த நிலையில், ஆந்திரக் கரையை நோக்கி சென்னைக்கு வடக்கே நெல்லூருக்கு தென்கிழக்கே மாலை நகரந் தொடங்கியது.
Advertisement
Advertisement
தற்போது நெல்லூருக்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள புயல், நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கும் இடையே பாபட்லாவிற்கு அருகே இன்னும் சற்றுநேரத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை நெருங்கியுள்ளதால் நெல்லூர் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
மேலும், புயல் கரையைக் கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.