'கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது' - மதுரைக்கிளை நீதிபதி கருத்து
கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது, அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது, அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
ராஜபாளையத்தைச் சேர்ந்த மேடையாண்டி என்பவர், தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்தவிடாமல் உயர்சாதியினர் தடுப்பதாகவும் தங்கள் குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மேலும், ஆட்சியரிடம் இதுகுறித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், 'கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது, அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்' என்று கூறியதுடன் மனுதாரர் உள்ளிட்ட பட்டியலின மக்கள் கோயிலில் வழிபாடு செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.