கோப்புப்படம் 
தமிழ்நாடு

தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் சேவை: அமைச்சர் தொடக்கி வைத்தார்!

மதுரை செல்லும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் சேவையை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை (பிப்.26) தொடக்கி வைத்தார்.

DIN

மதுரை செல்லும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் சேவையை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை (பிப்.26) தொடக்கி வைத்தார்.

சென்னையிலிருந்து வாரம் 6 முறை (வியாழக்கிழமை தவிர) மதுரைக்கு தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து மதுரைக்கு சுமாா் 6 மணி நேரத்தில் சென்றடையும் வகையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை முதல் சோதனை அடிப்படையில் தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே வாரியம் அறிவித்தது.

இதைத் தொடா்ந்து, சென்னை எழும்பூரிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 22671) காலை 6.25 மணிக்கு தாம்பரம் சென்றடையும். பின்னா் தாம்பரத்திலிருந்து காலை 6.27 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு பகல் 12.15 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 22672) இரவு 8.38 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

பின்னா் தாம்பரத்திலிருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூா் சென்றடையும். இந்தச் சேவையை மத்திய இணை அமைச்சா் முருகன் ஞாயிற்றுக்கிழமை (பிப்.26) தாம்பரத்திலிருந்து கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT