முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

மொழிபெயர்ப்பு மானியமாக ரூ.3 கோடி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு

தமிழ் மொழியின் சிறந்த புத்தகங்களை உலக மொழிகளில் மொழியாக்கம் செய்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

DIN

தமிழ் மொழியின் சிறந்த புத்தகங்களை உலக மொழிகளில் மொழியாக்கம் செய்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சென்னை சர்வதேச புத்தக காட்சியின் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இலக்கியச் செழுமை மிக்க தமிழ் படைப்புகளை உலகமெல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும். உலக அளவில் சிறகை விரித்துள்ளது தமிழ்நாடு. சர்வதேச புத்தக காட்சியை சென்னையில் ஆண்டுதோறும் நடத்த வேண்டும். உலகளாவிய அறிவு பரிமாற்றமே சென்னை  சர்வதேச புத்தக காட்சியின் நோக்கம். 

தமிழ் மொழியின் சிறந்த புத்தகங்களை உலக மொழிகளில் மொழியாக்கம் செய்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதல் நாள்கள் சர்வதேச புத்தக காட்சியை நடத்த ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் 3 நாள்கள் சர்வதேச  புத்தக காட்சி நடைபெற்றுள்ளது  என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 5 மருத்துவ பாடப் புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு முதல்முறையாக தமிழில் பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT