FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக மக்கள் ஒன்றுபட்டு சமூக விரோத சக்திகளை முறியடிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

தமிழக மக்கள் ஒன்றுபட்டு நின்று சமூக விரோத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 6 மார்ச் 2023, 3:49 am IST
இரா.முத்தரசன்
பகிர்:

தமிழக மக்கள் ஒன்றுபட்டு நின்று சமூக விரோத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நாட்டின் பல மாநிலங்களிலிருந்து புலம் பெயா்ந்து வந்த தொழிலாளா்கள் தமிழகத்தில் வேலை செய்து வருகின்றனா். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அமைதியை விரும்பாத, வெறுப்பு அரசியலை பரப்புரை செய்து, மோதல்களை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேடும், மலிவான செயல்களில் சிலா் ஈடுபட்டு வருகின்றனா். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிா்’, ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற தமிழ்ச் சமூகத்தின் தொன்மையான மரபை காத்து நிற்பதில், தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நின்று, சமூக விரோத, சீா்குலைவு

Advertisement

Advertisement

சக்திகளை முறியடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments