முகப்பு
தமிழ்நாடு

திமுக மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா, பிரியங்கா!

திமுக மகளிர் அணியால் நடத்தப்படும் மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:08 AM
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, சென்னையில் சனிக்கிழமை திமுக நடத்தும் மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய அளவிலான தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுஹாசினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா ஆகியோரும் திமுக நடத்தும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். 

சமீபத்தில் சட்டமாக்கப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா விஷயத்தில் பாஜக அரசு செய்துள்ள குளறுபடிகள், மணிப்பூர் வன்முறை தொடர்பான பிரச்னையில் மத்திய அரசின் அலட்சிய போக்கு ஆகியவற்றுக்கு இந்த மாநாட்டில் கடும் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், வேலையின்மை பிரச்னை குறித்தும் பேசப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.