அண்ணாமலை (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

உதயநிதி நீட் ரகசியத்தை சொல்ல வேண்டும்: அண்ணாமலை பேச்சு!

முட்டையை எல்லாம் காண்பித்து மேடையில் பேசும் உதயநிதி முதலில் நீட் ரகசியத்தை சொல்ல வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

DIN

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: “அமைச்சர் உதயநிதி மேடையில் முட்டையை எல்லாம் காண்பித்து பேசுகிறார். அதற்கு முன்பாக அவர் தேர்தலின்போது கூறிய நீட் ரகசியத்தை மக்களிடம் கூறவேண்டும். 

ஏதாவது ஒரு குழந்தை நீட் தேர்வுக்கு எதிராக இருக்கிறதா? யாருமே நீட் தேர்வுக்கு எதிராக இல்லை. ஆனால் திமுக 2016 முதல் நீட்டை வைத்து அரசியல் செய்து வருகிறது. மாணவர்களின் உணர்ச்சியைத் தூண்டி, அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடைந்து வருகிறது. 

அரசியலைப் பொறுத்தவரை ஒரு கட்சியில் இரண்டு விதத்தில் வளர்ச்சி ஏற்படும். பாஜக வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது. எப்படி சீப்பை ஒழித்து வைப்பதால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியாதோ அதைப்போல ஒரு கொடிக் கம்பத்தை அகற்றுவதால் பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்து விடமுடியாது.

தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை ஏமாற்றுவதற்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர் திமுகவினர். இந்த இயக்கத்தினால் எந்தப் பயனும் இல்லை. 

ஒரு முட்டையைக் கொண்டுவந்து 'நீட்'டுக்கான ரகசியம் என உதயநிதி சொல்கிறார். மக்கள் பணி செய்வதை விடுத்து நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார் உதயநிதி.

தமிழக மக்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளனர். உதயநிதி போன்றவர்கள் அவர்களும் படிக்கவில்லை. அவர்களைப் போலவே குழந்தைகளும் படிக்கக் கூடாது என நினைக்கின்றனர்.” என்று அண்ணாமலை பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT