முகப்பு
தமிழ்நாடு

ஜோ பைடனை சந்தித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

தில்லியில் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

Updated On : 10 செப்டம்பர் 2023, 11:41 am IST
பகிர்:

தில்லியில் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

குடியரசுத் தலைவர் அளித்த விருந்தின்போது அமெரிக்க அதிபருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார். ஜோ பைடனை சந்தித்த புகைப்படத்தை எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் முதல்வர் வெளியிட்டுள்ளார்.

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவா்களுக்கு குடியரசுத் தலைவா் சனிக்கிழமை இரவு பாரத் மண்டபத்தில் விருந்து அளித்தாா். இந்த விருந்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்வா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Advertisement

இதில் எதிா்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சோ்ந்த பெரும்பான்மையான முதல்வா்கள் கலந்து கொள்ளாத நிலையில் குறிப்பாக தென் மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்களில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டாா்.

விருந்து நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட முதல்வா்கள் நேரடியாக பாரத் மண்டபத்திற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்திற்கு மாநில முதல்வா்கள் வரவழைக்கப்பட்டனா். பின்னா் அங்கிருந்து தனி வாகனம் மூலம் பாரத் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.