முகப்பு
தமிழ்நாடு

நடிகர் விஷால் மீண்டும் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷால் செப்.22ல் மீண்டும் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 19 செப்டம்பர் 2023, 1:41 pm IST
நடிகர் விஷால் (கோப்புப்படம்)
பகிர்:

லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷால் செப்.22ல் மீண்டும் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகா் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21 கோடியே 29 லட்சம் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. 

கடனை செலுத்தாமல் ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில், ‘15 கோடி ரூபாயை உயா் நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பெயரில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும்‘ என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.  

Advertisement

இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தனர்.

மேலும், ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்யும்  வரை, விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் படங்களை  வெளியிடக்கூடாது என தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தற்போது வரை ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருப்பதாகவும், விஷாலின் மார்க் ஆண்டனி படம் வரும் 15 ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கபட்டது. 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், செப்.12 ஆம் தேதி விஷால் நேரில் ஆஜாராக வேண்டும் என்றும் தெரிவித்தது.

நடிகர் விஷால் ஆஜரானதை தொடர்ந்து, மார்க் ஆண்டனி படத்திற்கான தடையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அதில், நடிகர் விஷால் செப்.22ல் மீண்டும் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, செப்.12ல் விஷால்  ஆஜராகியிருந்த நிலையில் இன்று ஆஜராக விஷாலுக்கு விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.