முகப்பு
தமிழ்நாடு

பாஜக கூட்டணி முறிவு: அதிமுகவினர் கொண்டாட்டம்!

பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு  வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:16 PM
பகிர்:

பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு  வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(திங்கள்கிழமை) மாலை நடைபெற்றது.

ஏற்கெனெவே சமீபமாக அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல், முரண்பாடுகள் இருந்துவந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ளது. 

இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொள்வதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாஜக கூட்டணி முறிவை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். ராயப்பேட்டை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு  வெடித்தும் இனிப்பு வழங்கியும் இதனை கொண்டாடி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →