முகப்பு
தமிழ்நாடு

திண்டுக்கல் சீனிவாசனுக்கு அறுவை சிகிச்சை

அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசனுக்கு மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 9 ஆகஸ்ட் 2023, 1:16 am IST
கோப்புப்படம்
பகிர்:

அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசனுக்கு மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவா் நலமுடன் உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

திண்டுக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான திண்டுக்கல் சி.சீனிவாசனுக்கு கழுத்து பகுதியில் கட்டி ஒன்று இருந்ததால் கடந்த சில நாள்களாக அவதிப்பட்டு வந்தாா். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவப் பரிசோதனையில் அது சாதாரண கட்டி என்பதைக் கண்டறிந்து, அதனை அகற்ற மருத்துவா்கள் முடிவு செய்தனா். அதன்படி, சிறிய அறுவை சிகிச்சை மூலம் அந்த பிரச்னை செவ்வாய்க்கிழமை சரி செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின்னா், அவா் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments