முகப்பு
தமிழ்நாடு

புயல் பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினுடன் மோடி பேச்சு!

‘மிக்ஜம்’ புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Updated On : 7 டிசம்பர் 2023, 11:50 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: ‘மிக்ஜம்’ புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தமிழகத்தில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது.

இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.

Advertisement

Advertisement

மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை டி.ஆர்.பாலு இன்று வழங்கினார். அப்போது தொலைபேசியில் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

இதனிடையே, இன்னும் சற்றுநேரத்தில் சென்னை வருகை தரவிருக்கும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்யவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments