புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி நேரில் ஆய்வு!
சென்னை புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மிக்ஜம் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் சென்னை ஸ்தம்பித்துள்ளது. கடந்த டிச. 3, 4 ஆம் தேதி பெய்த மழையால் இன்னும் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையின் பிரதானமான புழல் ஏரி நிரம்பி அதன் கரை உடையும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், புழல் ஏரி பாதுகாப்பாகவே உள்ளது என்று தமிழக நீர்வளத்துறை செயற்பொறியாளர் விளக்கம் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று புழல் ஏரியை பார்வையிட்டனர்.
இதையும் படிக்க | புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது: தமிழக அரசு விளக்கம்
மேலும், ஏரியின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தனர்.
இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியில் 20 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது. நீர்வரத்து 550 கனஅடி. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.