முகப்பு
தமிழ்நாடு

திமுக இளைஞரணி மாநாடு டிச.24-க்கு ஒத்திவைப்பு!

சேலத்தில் நடைபெறவிருந்த திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு டிசம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Updated On : 8 டிசம்பர் 2023, 11:42 am IST
கோப்புப்படம்
பகிர்:


சேலத்தில் நடைபெறவிருந்த திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு டிசம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 

2007-ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று கழக வரலாற்றில் முத்திரைப் பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, 

Advertisement

Advertisement

வருகிற டிசம்பர் 17, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறவிருந்த நிலையில், மழை காரணமாக ஒரு வாரக் காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு டிசம்பர் 24-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments