தொடர்ந்து 3-வது நாளாக அதேவிலையில் நீடிக்கும் தங்கம்: மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக இன்றும் அதேநிலையில் நீடித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக இன்றும் அதேநிலையில் நீடித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைக் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த இரண்டு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், தற்போது சில வாரங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்நிலையில், பிப்ரவரி 27ம் தேதி காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.5,201ஆகவும், ஒரு சவரன் ரூ.41,608 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
அதேசமயம், வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.69.00 ஆகவும், ஒரு கிலோ ரூ.100 குறைந்து ரூ.69,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
உலக அளவில் பணவீக்கம், இறக்குமதி வரி, உள்ளிட்ட பல காரணங்கள் தங்கத்தின் விலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த மூன்று வாரங்களில் தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.1000-க்கும் மேல் குறைந்துள்ளது என்பது குறி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.