முகப்பு
தமிழ்நாடு

திண்டுக்கல்லில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தேங்காய் உடைக்கும் போராட்டம்

தேங்காய்க்கு கட்டுபடியான விலை நிர்ணயிக்க கோரி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. 

Updated On : 10 ஜூலை 2023, 11:10 am IST
பகிர்:

திண்டுக்கல்: தேங்காய்க்கு கட்டுபடியான விலை நிர்ணயிக்க கோரி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிச்சைமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கிருஷ்ணன் முன்னில வைத்தார். 

போராட்டத்தின் போது கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140க்கு கொள்முதல் செய்ய வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்யப்படும் கொப்பரை அளவை 290 கிலோவில் இருந்து 900 கிலோவாக உயர்த்த வேண்டும். தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும். கேரளத்தைப் போன்று கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிலோ ரூ.50க்கு தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். 

Advertisement

Advertisement

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தேங்காய் உடைத்து நடத்திய இந்த போராட்டம் பரபரப்பு ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments