முகப்பு
தமிழ்நாடு

திருவையாறில் ஐயாறப்பா் கோயில் தேரோட்டம்: பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்!

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஐயாறப்பா் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 ஜூலை 2023, 12:08 pm IST
திருவையாறில் வெள்ளிக்கிழமை பெண்கள் இழுத்த தேர்.
பகிர்:

தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஐயாறப்பா் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் ஜூலை 13 ஆம் தேதி தொடங்கியது. 

இந்நிலையில், 9-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை திருத்தேரோட்ட விழா நடைபெற்றது. திருத்தேரில் அறம்வளா்த்த நாயகி எழுந்தருளியதைத் தொடர்ந்து, ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகளிலும் இத்தேர் வலம் வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தேரில் எழுந்தருளிய அறம் வளர்த்த நாயகி.

இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா சனிக்கிழமை பிராயசித்தாபிஷேகத்துடன் நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதினம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவுறுத்தலின் பேரில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments