தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
2022-2023-ம் ஆண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,88,64 மாணவ, மாணவிகள் தேர்வெழுதுகின்றனர்.
தமிழக பள்ளிகளில் மட்டும் 3,60,908 மாணவர்கள் மற்றும் 4,12,779 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 7,73,688 இன்று தேர்வெழுதுகின்றனர்.
Advertisement
Advertisement
புதுச்சேரியில் 6,799 மாணவர்கள், 7,577 மாணவிகள் என மொத்தம் 14,376 பேர் தேர்வெழுதுகின்றனர். தனித்தேர்வர்களாக 5,338 பேரும், மாற்றுத்திறனாளிகள் 5,835 பேரும், 125 சிறைவாசிகளும் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்வுப் பணிக்காக 43,200 கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் இடங்களில் தடையில்லா மின்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.