நாகர்கோவில் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து: 4 பேர் பலி
நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆடல், பாடல் குழுவினர் திருச்செந்தூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கன்னியாகுமாரிக்கு காரில் திரும்பியபோது நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் எதிரே வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணம் செய்த 12 பேரில் ஓட்டுநர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேய பலியாகினர். 9 பேர் பலத்த காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.