FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தயார் நிலையில் 4,967 நிவாரண முகாம்கள்: அமைச்சர் பேட்டி

தமிழ்நாட்டில் 4,967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Updated On : 14 நவம்பர் 2023, 4:25 pm IST
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
பகிர்:

தமிழ்நாட்டில் 4,967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் கனமழையால் ஏற்படும் எந்தவிதமான சூழ்நிலைகளையும் சமாளிக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது: 

Advertisement

Advertisement

தமிழ்நாட்டில் 400 பேரிடர் மீட்புக் குழு, 4,967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. கடற்கரையோர மாவட்டங்களில்  121 இடங்களில் புயல் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. கனமழையால் இதுவரை பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது. 

கனமழையால் ஏற்படும் எந்தவிதமான சூழ்நிலைகளையும் சமாளிக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

மக்களுக்கு முறையாக எச்சரிக்கை விடுத்த பின்னரே, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அணை நிலவரங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளன. 

சென்னையில் 169 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 22 சுரங்கப் பாதைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வானிலை மைய அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு அவற்றுடன் இணைந்து மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments