தமிழ்நாடு

அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது!

அதிமுக-பாஜக கூட்டணி உடனான கூட்டணி முறிந்தது.

DIN

அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி முறிந்ததாக கே.பி. முனுசாமி அறிவித்துள்ளார்.

பாஜக உடனான கூட்டணி முறிந்து விட்டதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது:

பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி விட்டது. பாஜகவுடன் கூட்டணி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து இன்று முதல் அதிமுக விலகுகிறது. இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைக்கப்படும்.

தொடா்ந்து, முன்னாள் முதல்வா் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அதிமுகவினர் இடையே எதிா்ப்பு நிலவியதால் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியுள்ளது.

மேலும் அவர் பேசுகையில், கடந்த ஓராண்டாகவே, திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் தொடர்பாக  பாஜக விமரிசித்து வருகிறது. அதிமுக பொன் விழா மாநாட்டையும் பாஜக தலைமை விமரிசித்திருந்தது.

எனவே, 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும் விருப்பத்துக்கும் மதிப்பளித்து, கூட்டணியிலிருந்து விலகுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அதிமுக தலைமைக் கழக செயலா்கள், மாவட்டச் செயலா்கள், கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 3.45 மணிக்குத் தொடங்கியது.

கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் 5.30 மணியளவில் நிறைவு பெற்றது.

பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு  வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏதோ நினைவுகள்... மாளவிகா மேனன்!

விசிக அலுவலகத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா: திருமாவளவன் பங்கேற்பு!

வாட்ஸ்ஆப்புக்கும் வந்துவிட்டது மோசடி கும்பல்! எச்சரிக்கை, எதற்காகவும் ஓ.டி.பி.யைப் பகிராதீர்கள்!

விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்!

தொழிலதிபர் சுட்டுக்கொலை தில்லியில் பயங்கரம்

SCROLL FOR NEXT