விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு ஏற்கனவே கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடரந்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் எம்எல்ஏ புகழேந்தி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
Advertisement
Advertisement
அவருக்கு சிகிச்சை அளிக்க, சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு விழுப்புரம் விரைந்திருந்த நிலையில், அவர் காலமான செய்தி வெளியாகியிருக்கிறது.
71 வயதான இவருக்கு கல்லீரல் பாதிப்பு காரணமாக சில நாள்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில்தான் வீடு திரும்பியிருக்கிறார்.
நேற்று விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற முதல்வர் பிரசாரக் கூட்டத்திலும் புகழேந்தி கலந்து கொண்டிருந்தார். நிகழ்ச்சியிலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் உடனடியாக விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக இன்று காலை தகவல்கள் வெளியாகின. சென்னையில் இருந்துமருத்துவர்கள் குழு விழுப்புரம் விரைந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவமனை வாயிலில் ஏராளமான திமுகவினர் திரண்டுள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகித்துவந்த புகழேந்தி, திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.