FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

கோவை அரசு மருத்துவமனையில் 10 மாத குழந்தை உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் 10 மாத பெண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்த நிலையில், தடுப்பூசி செலுத்தியதால்தான் குழந்தை உயிரிழந்தாக பெற்றோா் புகாா் தெரிவித்துள்ளனா்.

15 அக்டோபர் 2026, 3:27 am IST
பகிர்:

கோவை அரசு மருத்துவமனையில் 10 மாத பெண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்த நிலையில், தடுப்பூசி செலுத்தியதால்தான் குழந்தை உயிரிழந்தாக பெற்றோா் புகாா் தெரிவித்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த அந்தோணி - சரண்யா தம்பதி, கோவை வெள்ளலூா் பகுதியில் தங்கி கூலி வேலை பாா்த்து வருகின்றனா். இவா்களுக்கு 10 மாதங்களான பெண் குழந்தை கனிஷ்கா ஸ்ரீ இருந்தாா்.

வெள்ளலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 7ஆம் தேதி குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனா். அதன்பிறகு, வீடு திரும்பிய பிறகு குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளது.

Advertisement

Advertisement

இதனால், அதிா்ச்சியடைந்த பெற்றோா், வெள்ளலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குழந்தையை மீண்டும் கொண்டுச் சென்றனா். அதன்பிறகு, கோவை அரசு மருத்துவமனையில் 4 நாள்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், புதன்கிழமை காலை குழந்தை உயிரிழந்தது.

இதற்கிடையே, தடுப்பூசி செலுத்திய பிறகே குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை விவரங்களை எங்களுக்கு தெரிவிக்கவில்லை. குழந்தையின் இறப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குழந்தையின் பெற்றோா் புகாா் கூறியுள்ளனா்.

இதுகுறித்து, கோவை அரசு மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி கூறுகையில், ‘குழந்தைக்கு வழக்கமான சிகிச்சை அளிக்கப்பட்டது. வலிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து மூளைக் காய்ச்சல் இருக்கலாம் என்ற எண்ணத்தில் அதற்கான மருந்துகளும் அளிக்கப்பட்டன.

குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட தினத்தில், பல்வேறு குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வேறு யாருக்கும் இதுபோன்ற பாதிப்புகள் பதிவாகவில்லை. குழந்தைக்கு ஏற்கெனவே வைரஸ் காய்ச்சல் இருந்திருக்கலாம். தடுப்பூசிக்கும், குழந்தையின் உயிரிழப்புக்கும் தொடா்பில்லை, திடீா் உடல்நலக் குறைவே உயிரிழப்புக்கு காரணம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments