பாஜகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் இன்று பிற்பகலில் அதிமுகவில் இணையவுள்ளதாக கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கடந்த வாரம் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள் பலர் பாஜகவில் இணைந்த நிலையில், கோவையில் நேற்று அதிமுக மற்றும் பிற கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த நிகழ்வு திடீரென்று ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணையவுள்ளதாக அதிமுகவை சேர்ந்த கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு பாஜகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணையவுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
பல்லடத்தில் “என் மண், என் மக்கள்” நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கவுள்ள நிலையில், அம்மன் அர்ஜுனின் பேட்டி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.