பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!
சத்தீஸ்கரில் இந்து மதத்திற்குத் திரும்பிய பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவி பெண் பாஜக எம்.எல்.ஏ. வரவேற்றது குறித்து...
சத்தீஸ்கரில் இந்து மதத்திற்குத் திரும்பிய பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவி பெண் பாஜக எம்.எல்.ஏ. அவர்களை வரவேற்றார்.
சத்தீஸ்மர் மாநிலம் கபீர்தம் மாவட்டத்திற்குட்பட்ட குல்ஹிதோங்ரி பகுதியில் பழங்குடியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 140 பேர் இந்து மதத்திற்குத் திரும்பினர். சனாதன தர்மத்தை ஏற்றுக்கொண்டு இந்து முறைப்படி இயங்குவதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பண்டாரியா தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பாவனா போஹ்ரா, அவர்களின் பாதங்களை தண்ணீர் ஊற்றிக் கழுவி, இந்து மதத்திற்கு அவர்களை வரவேற்றார்.
Advertisement
Advertisement
சத்தீஸ்கரில் பழங்குடியைச் சேர்ந்த மக்களை இந்து மதத்திற்கு கொண்டுவரும் பணிகளை பாவனா போஹ்ரா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதற்காக குழு ஒன்றையும் அவர் அமைத்துள்ளார்.
அக்குழுவுடன் சேர்ந்து கடந்த வாரம், இந்து மதத்திற்கு திரும்புவதாக பழங்குடியைச் சேர்ந்த 66 பேருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தார். கவர்தா மாவட்டத்தில் பழங்குடியைச் சேர்ந்த 265 பேர் இந்து மதத்திற்கு திரும்பியுள்ளனர்.
தற்போது, பழங்குடியினத்தைச் சேர்ந்த 140 பேர் இந்து மதத்திற்கு திரும்பியுள்ளனர். அவர்களின் பாதங்களைக் கழுவி இந்து மதத்திற்கு அவர்களை வரவேற்றுள்ளதாக பாவனா கூறுகிறார்.
இந்த நடவடிக்கையின் மூலம் பழங்குடியைச் சேர்ந்த மேலும் பலர் இந்து மதத்திற்கு திரும்புவார்கள் என்றும், தங்களின் இந்த நடவடிக்கை பழங்குடியிடையே இந்து தர்மத்தின் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
BJP MLA Bhawna Bohra welcomed back 140 tribal men women to Hinduism Chhattisgarh
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.