FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை!

நீலகிரி கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை!

22 ஜூன் 2024, 2:56 pm
பகிர்:

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் (ஜூன் 22, 23) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவு பதிவாகக் கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் (ஜூன் 22, 23) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஜூன் 24, 25, 26 ஆகிய 3 நாள்கள் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாலை, இரவு வேளைகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசுமென மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.