முகப்பு
தமிழ்நாடு

கோயில் எலுமிச்சை விலை ரூ.35,000! ஏலம் எடுத்த ஈரோடு பக்தர்!!

எலுமிச்சையை வீட்டில் வைத்து வழிபடுவதன்மூலம் செல்வமும், ஆரோக்கியமும் கிடைக்கும் என நம்புகிறார் பக்தர்.

Updated On : 10 மார்ச் 2024, 8:26 pm IST
கோப்புப் படம்
பகிர்:

சிவராத்திரியையொட்டி சிவனுக்கு படைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை ரூ.35 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சிவரிகி அருகே அமைந்துள்ள சிவன் கோயிலில் சிவராத்திரியையொட்டி சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பூஜையில் சிவனுக்கு படைக்கப்பட்ட எலுமிச்சை உள்ளிட்ட பழங்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

பின்னர் சிவனிடம் வைத்து படைக்கப்பட்ட பழங்கள் ஏலம் விடப்பட்டது. இதில், ஒரு எலுமிச்சை பழத்தை ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.35 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்துள்ளார்.

ஏலம் எடுக்கப்பட்ட எலுமிச்சை, சிவனிடம் வைத்து பூஜை செய்து பக்தரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனை தனது வீட்டில் வைத்து வழிபடுவதன்மூலம் தனக்கு செல்வமும், ஆரோக்கியமும் கிடைக்கும் என நம்புவதாக பக்தர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments