முகப்பு
தமிழ்நாடு

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: அரியலூர் முதலிடம்.... முதல் 5 மாவட்டங்கள்!

அரியலூர் மாவட்டத்தில் 97.31 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

Updated On : 10 மே, 2024 at 7:56 AM
பகிர்:

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் சுமார் 9.08 லட்சம் பேர் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் 97.31 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில், 186 பள்ளிகளைச் சேர்ந்த 9565 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 9308 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சியில் 97.31 சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் 97.02 சதவிகிதம் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டம் 96.36 சதவிகிதம் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம் 96.24 சதவிகிதம் தேர்ச்சியுடன் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளது.

மேலும், திருச்சி மாவட்டம் 95.23 சதவிகித தேர்ச்சியுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டிலும் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்திருந்த சிவகங்கை மாவட்டம், இந்தாண்டும் 2 ஆம் இடம் பிடித்து அந்த இடத்தை தக்க வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.