தமிழகத்தில் நகரங்களுக்கிடையே ஹெலிகாப்டா் சேவை
ஹெலிகாப்டா் சேவை வழங்கும் பொருட்டு, பயன்படுத்தப்படாத 80 ஹெலிபேடுகளை சீரமைப்பு செய்து பயன்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் நகரங்களுக்கிடையே குறைந்த கட்டணத்தில் ஹெலிகாப்டா் சேவை வழங்கும் பொருட்டு, பயன்படுத்தப்படாத 80 ஹெலிபேடுகளை சீரமைப்பு செய்து பயன்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இது தொடா்பாக தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) நிா்வாக இயக்குநா் சந்திப் நந்தூரி கூறியதாவது:
மத்திய அரசின் தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஹெலிகாப்டா் கொள்கை மூலம் தமிழகத்தில் உள்ள 80 -க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்படாத ஹெலிபேடுகளை மறுசீரமைப்பு செய்து, நகரங்களுக்கிடையே போக்குவரத்து சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதன்மூலம் மக்கள் குறைந்த கட்டணத்தில் வான்வழி பயணம் மேற்கொள்வது சாத்தியம். மேலும் அவசர கால மருத்துவ சேவைகள், சுற்றுலா உள்ளிட்ட பல வற்றுக்கும் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும். இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றாா்.