அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா்களாக இருவா் நியமனம்
அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா்களாக 2 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை பொதுத் துறைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தாக்கா் வெளியிட்டுள்ளாா். அவரது உத்தரவு:
அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா்களாக 2 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை பொதுத் துறைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தாக்கா் வெளியிட்டுள்ளாா். அவரது உத்தரவு:
மூத்த வழக்குரைஞா்களான கே.சந்திரமோகன், எம்.சுரேஷ்குமாா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தின் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். நீதித் துறை அலுவலா்களை நியமிப்பது தொடா்பான விதிமுறைகளின் கீழ், இவ்விருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.