முகப்பு
தமிழ்நாடு

சில மணிநேரத்தில் உருவாகிறது ஃபென்ஜால் புயல்!!

ஃபென்ஜால் புயல் உருவாகும் என்று வானிலை மையம் அறிவித்திருப்பது பற்றி...

Updated On : 29 நவம்பர் 2024, 11:43 am IST
- DOTCOM
பகிர்:

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தை நோக்கி புயல் வரும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதற்கான சாதகம் இல்லாததால் புயல் உருவாக வாய்ப்ப்பில்லை என்றும் ஆழ்ந்த மண்டலமாகவே கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, ஃபென்ஜால் புயல் உருவாவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தற்போது, தென்மேற்கு வங்கக் கடலில் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்த மண்டலம், அடுத்த 3 மணிநேரத்தில் புயலாக மாறவுள்ளதாக வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையத்தின் அறிவிப்பு.

நாகை மாவட்டத்துக்கு கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 360 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவிலும் தற்போது நிலை கொண்டுள்ளது.

நாளை(நவ.30) பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் அருகே புயல் கரையைக் கடக்கும் என்றும், அப்போது 90 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புயல் கரையைக் கடந்த பிறகு உள்மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments