இன்று நீலகிரி, கோவை உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 15 மாவட்டங்களில் திங்கள்கிழமை (அக்.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடுஇன்று நீலகிரி, கோவை உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 15 மாவட்டங்களில் திங்கள்கிழமை (அக்.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 15 மாவட்டங்களில் திங்கள்கிழமை (அக்.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு ஆந்திரம் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு திசைக்கு இடைப்பட்ட வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், திங்கள்கிழமை (அக்.7) முதல் அக்.11-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை: அக்.7-ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகா், கன்னியாகுமரி, ஈரோடு, தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், அக்.8-இல் நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூா், விருதுநகா், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கடலூா் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் தலா 130 மி.மீ. மழை பதிவானது. ராசிபுரம் (நாமக்கல்) 120, சேலம் 110, திருமயம் (புதுக்கோட்டை), ஆலங்குடி (புதுக்கோட்டை) தலா 90 மி.மீ. மழை பதிவானது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அக். 7, 8 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.