PTI
தமிழ்நாடு

திருச்சி சாலையில் 4 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து நெரிசல்!

விக்கிரவாண்டி, விழுப்புரம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நகர முடியாத அளவுக்கு நெரிசல்...

DIN

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(அக். 27) மிகப் பிரம்மாண்டமாக திருவிழா போல் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, மாலை 7 மணியளவில் நிறைவடைந்தது.

அரசியல் களத்தில் தடம் பதிக்க வந்துள்ள தங்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் விஜய் மாநாட்டில் பங்கேற்று பேசுவதை நேரில் கண்டுகளிக்க, லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒருபுறம் திரள, ஏராளமான மக்களும் மாநாட்டுத் திடலுக்கு சென்றிருந்தனர்.

இந்த நிலையில், மாநாட்டில் உரையாற்றிய பின், மாலை 6.30 மணியளவில் மாநாட்டுத் திடலிலிருந்து விஜய் புறப்பட்டுச் செல்ல, அவரைத் தொடர்ந்து தொண்டர்களும் மக்களும் அங்கிருந்து ஒரே நேரத்தில் கிளம்பினர்.

இதன் காரணமாக, சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், விழுப்புரம் செல்லும் வழித்தடத்திலும், திண்டிவனம் செல்லும் வழித்தடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகியுள்ளது. விழுப்புரம் சுங்கச்சாவடி அருகே(இரவு 11 மணி நிலவரப்படி) சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்பதை காண முடிந்தது. போக்குவரத்து சீராக அதிகாலை வரை ஆகலாம் என்றே அங்கிருப்பவர்கள் சொல்கின்றனர்.

மாநாட்டிற்குச் சென்ற பலரால் விஜய்யை நேரில் பார்க்க முடியவில்லை என்பதும், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாஸ்கோவில் புதினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!

பெங்களூரில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் திருப்பம்: கணவரால் மயக்க மருந்து செலுத்திக் கொல்லப்பட்டாரா?

மழை நின்றது: பாகிஸ்தான் வெற்றிபெற 113 ரன்கள் இலக்கு!

பாக். போலியோ பணியாளர்கள் மீது மீண்டும் தாக்குதல்! காவல் அதிகாரி சுட்டுக்கொலை!

புதுவைக் கடலில் டால்பினுடன்... சஞ்சனா திவாரி!

SCROLL FOR NEXT