விஜய் கட்சியில் திராவிடம் என்ற சொல் இல்லாததே மகிழ்ச்சி: சீமான்
நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சியில் திராவிடம் என்ற சொல் இல்லாததே மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சியில் திராவிடம் என்ற சொல் இல்லாததே மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் நடிகர் விஜய்யின் இந்த செயல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
படிக்க | அரசியல் ஏன்? நடிகர் விஜய் விளக்கம்
அந்தவகையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து பேசிய சீமான், விஜய் தொடங்கியுள்ள கட்சியின் தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் நன்றாக உள்ளது. இதை வரவேற்கிறேன். புதிதாக தொடங்கும் கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என பல பெயர்களைக் கொண்டு பரீசலித்துவந்தார். அதில் இந்த பெயரை தேர்வு செய்துள்ளார். விஜய் தொடங்கியுள்ள கட்சி பெயரில், திராவிடம் என்ற சொல் இல்லாததே பெரிய மகிழ்ச்சி தான்.
அரசியலில் அவருக்கான வாக்கு அவருக்கு, எனக்கான வாக்கு எனக்கு. அவர் தொடங்கிய கட்சியில் கழகம் என்று இருப்பது தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டு கொடுக்கவில்லை. கழகம் என்பது ஓர் கூட்டமைப்பிற்கு கூறப்படும் சொல். கழகம் என்பதை யார் வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.