முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

Updated On : 16 ஏப்ரல், 2025 at 8:30 AM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,

இன்று(புதன்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு (மாலை 4 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், கோவை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →