அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் மழை!
இரவு 10 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை இன்று (அக். 15) நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாக விலகியது. அதே நேரத்தில், வடகிழக்கு திசை காற்று தென்னிந்திய தீபகற்ப பகுதிகளில் வீசத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகம், கேரளம், மாஹே ஆகிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) நீலகிரி, கோவை, சேலம், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Chennai Meteorological Centre has stated that rain is likely in 25 districts, including Chennai, over the next two hours.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.