FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அரையாண்டுத் தோ்வு இன்று நிறைவு: நாளைமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு இன்றுடன் நிறைவு

Updated On : 23 டிசம்பர் 2025, 3:24 am IST
அரையாண்டுத் தோ்வு எழுதும் மாணவிகள்.
பகிர்:

சென்னை: தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் (டிச. 23) நிறைவு பெறவுள்ள நிலையில், புதன்கிழமை முதல் ஜன. 4 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வு கடந்த டிச. 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அனைத்து வகுப்புகளுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை நிறைவு பெறவுள்ளன. இதையடுத்து பள்ளிகளுக்கு டிச. 24 முதல் ஜன. 4 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜன. 5-ஆம் தேதி (திறக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments