செங்கோட்டையன்  படம் | யூடியூப்
தமிழ்நாடு

அதிமுகவில் நான் சாதாரண தொண்டன்: செங்கோட்டையன்

அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

DIN

அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் இன்று (பிப். 17) வெளியானது. இதில் செங்கோட்டையனின் பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் திருச்சியில் இது குறித்து செய்தியாளர்களுடன் செங்கோட்டையன் பேசியதாவது,

''தொடர்ந்து வெற்றி பெற்ற அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் துரோகிகள் சிலரால் தோல்வி ஏற்பட்டது என்று கூறியிருந்தேன். அந்தியூர் தொகுதியை மட்டும் தான் குறிப்பிட்டேனே தவிர வேறு எந்தத் தொகுதியையும் குறிப்பிடவில்லை'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், ஓ. பன்னீர்செல்வம் அணியில் இடம்பெறவுள்ளதாக எழுந்த பேச்சுக்கள் குறித்து பேசிய அவர்,

''அதைப் பற்றி அவர்களிடம் (ஓ. பன்னீர் செல்வம் அணி) தான் கேட்க வேண்டும். அமைதியாக அவரவர் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் அதுவே நல்லது. அதிமுகவில் நான் ஒரு சாதாரண தொண்டன்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்! செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT