ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
தவெக தலைவர் விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு பற்றி...
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யாக மாறியது பற்றிய ஆவணப் படத்தை அக்கட்சியின் ஆண்டுவிழாவில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெற்று வருகிறது.
தொடக்க விழா நிகழ்ச்சியில் கட்சித் தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றுள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க : தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழா: விஜய் - பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு!
நிகழ்ச்சி மேடைக்கு வந்த விஜய், புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத் திணிப்புக்கு எதிராக போராட உறுதியேற்போம் என தவெக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கையெழுத்திட்டு கெட்-அவுட் இயக்கத்தை தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, நடிகராக இருந்து அரசியல் கட்சித் தலைவராக நடிகர் விஜய்யின் பரிணாம ஆவணப் படத்தை விழாவில் வெளியிட்டனர்.
விஜய் ரசிகர் மன்றத்தில் தொடங்கி திரைத்துறையில் அரசியல் ரீதியிலாக விஜய் சந்தித்த பிரச்னைகள், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு, மக்கள் நலத்திட்டப் பணிகள், நீட் எதிர்ப்பு உள்ளடங்கிய காட்சிகளை ஆவணப் படமாக உருவாக்கியுள்ளனர். இந்த ஆவணப் படத்தின் காட்சிகளை பட்டிமன்ற பேச்சாளர் ராஜ் மோகன் தொகுத்து வழங்கியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.