கோப்புப்படம்.  
தமிழ்நாடு

1-5ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு

1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு....

DIN

வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயங்களுடன் முதியவா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

மின்சாரம் பாய்ந்து வியாபாரி உயிரிழப்பு

இரும்புக் குழாய் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சுற்றுலாப் பயணிகள் வாகனத்தில் இருந்த பாம்பு

முதல்வா் கோப்பையை வென்ற பாா்வைத்திறன் குறையுடைய மாணவிகளுக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT