FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆம்புலன்ஸில் வந்து தேர்வெழுதிய மாணவர் சாதனை

ஆம்புலன்ஸில் வந்து தேர்வெழுதிய மாணவர் 565 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

Updated On : 8 மே 2025, 12:16 pm IST
ஆம்புலன்ஸ்
பகிர்:

ராமநாதபுரத்தில், நேரிட்ட விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர் சமய ரித்திஷ் நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்து பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று காலை 9 மணியளவில் வெளியிட்டார்.

வழக்கம்போல் மாணவிகளே முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸில் வந்து தேர்வெழுதிய மாணவர் சமய ரித்திஷ் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள மருத்துவமனையிலிருந்து பள்ளிக்கு வந்திருந்தார்.

தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிளஸ் பொதுத் தேர்வில் 600-க்கு 565 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கிறார்.

எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமய ரித்திஷ், தேர்வுக்கு மையத்துக்கு ஆம்புலன்ஸில் வந்து தேர்வெழுதிச் சென்றார்.

இந்த நிலையிலும் நன்கு படித்து பிளஸ் 2 தேர்வில் 565 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவருக்கு பள்ளி சார்பிலும் உடன் படித்த மாணவர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments