புதுக்கோட்டை: சுந்தரசோழபுரம் மலையப்பெருமாள் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை சுந்தரசோழபுரம் மலையப்பெருமாள் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டுப் போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரம் மலையப்பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்றது.
ஜல்லிக்கட்டினை திமுக மாநில மருத்துவரணி துணைச்செயலர் அண்ணாமலை ரகுபதி, வட்டாட்சியர் எம்.சாந்தா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட எண்ணூறுக்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
Advertisement
Advertisement
வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 220 மாடு பிடி வீரர்கள் களமிறங்கி காளைகளை அடக்க முற்பட்டு வருகின்றனர்.
காளைகளை சிறந்த முறையில் அடக்கிய வீரர்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் சி.கண்ணன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.