தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள டிட்வா புயல்  படம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு

வேதாரண்யத்திலிருந்து 110 கி.மீ. தொலைவில் டிட்வா புயல்! நாளை மாலை கரையைக் கடக்கும்!

வடக்கு - வடமேற்கு திசையில் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது டிட்வா புயல்...

இணையதளச் செய்திப் பிரிவு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள டிட்வா புயல் வேதாரண்யத்திலிருந்து 110 கி.மீ. தொலைவிலும் சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இது, வடக்கு - வடமேற்கு திசையில் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், நாளை (நவ., 30) அதிகாலை வட தமிழகம், புதுவை மற்றும் வடக்கு ஆந்திரக் கடல் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதோடுமட்டுமின்றி, கரையைக் கடக்கும்போது, புயலின் மையப்பகுதி சென்னை கரையிலிருந்து வெறும் 25 கி.மீ. தொலைவில் நிலவ வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை (நவ., 30) மாலை முதல் புயல் கரையைக் கடக்கக்த் தொடங்கும் என்றும் டிச. 1 வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயலால், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் இன்று சிவப்பு நிற (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு மிக கனமழை மற்றும் ஓரிரு இடங்களில் அதிகன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் விட்டு விட்டு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு மழை படிப்படியாகக் குறையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்திலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க | டிட்வா புயல்: சென்னையில் நாளை 47 விமானங்களின் சேவைகள் ரத்து

cyclone Ditwah will cross the coast tomorrow evening

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-ஆவது முறையாக பிபிஎல் கோப்பை வென்ற பெர்த் ஸ்கார்சிஸ்!

யு19 உலகக் கோப்பை: ஜுவெல் ஆண்ட்ரூ அரைசதம்; மே.இ.தீவுகள் 226 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

"மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என் குடும்பம் : கானா வினோத் வீட்டில் கமருதீன் உருக்கம்!

கோவையில் சேற்றில் சிக்கிய காட்டு யானை 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்பு

SCROLL FOR NEXT