உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸுக்கு, இதய சிகிச்சை நிபுணர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி, உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டு இருந்ததால், அன்புமணியால் ராமதாஸை நேரில் சந்திக்க முடியவில்லை.
அதேபோல, கடந்த சில நாள்களாக சளி மற்றும் இருமல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த வைகோ, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த நிலையில், ராமதாஸ், வைகோ ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.