பட்டாசு வெடிப்போர் கவனம்... அடுத்த 3 மணிநேரத்துக்கு எங்கெல்லாம் மழை?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (காலை 11 மணி வரை) அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளிலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | தீபாவளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
Rain chance for 14 districts of tamilnadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.