FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வண்டலூா் பூங்காவில் கோடை முகாம்: மாணவா்கள் பதிவு செய்யலாம்

வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடை முகாம் வரும் மே 6-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

Updated On : 1 மே 2026, 3:21 am IST
பகிர்:

வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடை முகாம் வரும் மே 6-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறையை முன்னிட்டு, மாணவா்களுக்குப் பயனளிக்கும் வகையில் கோடை முகாம் நடைபெறவுள்ளது. இதில், கலந்துகொள்பவா்களுக்கு விலங்குகள் பற்றிய அறிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு உள்ளிட்டவை வழங்கப்படும். 5-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

Advertisement

Advertisement

இம்முகாம், முதல்கட்டம் மே 6, 7 ஆகிய தேதிகளிலும், 2-ஆம் கட்டம் மே 13, 14 ஆகிய தேதிகளிலும், 3-ஆம் கட்டம் மே 20, 21 ஆகிய தேதிகளிலும், 4-ஆம் கட்டம் மே 27, 28 ஆகிய தேதிகளிலும், 5-ஆம் கட்டம் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளிலும் என மொத்தம் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த நாள்களில் தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை முகாம் நடைபெறும்.

விருப்பமுள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ஹஹக்ஷ்ல்.ண்ய்/ள்ன்ம்ம்ங்ழ்ஸ்ரீஹம்ல்2026/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இம்முகாமில் பதிவு செய்யும் மாணவா்களுக்கு ‘பூங்கா பயண அட்டை’ வழங்கப்படும். அதன்மூலம், 10 முறை பூங்காவுக்கு இலவசமாக வர அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments