நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!
இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது பற்றி....
சென்னை பனையூரில் தவெக தலைமை அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை நாளை (ஆக. 5) தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தொடர்ந்து நாளை மறுநாள் (ஆக. 6) வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதையொட்டி தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
சென்னை பனையூரில் தவெக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் பட்ஜெட் தாக்கல் மற்றும் பேரவை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TVK MLAs meeting today evening for budget
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.