FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! பட்ஜெட்டில் அறிவிப்பு!

கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 150 நாள்கள் வேலைவாய்ப்பை வழங்கும் 'வெற்றி 150' திட்டம் பற்றி...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:50 pm IST
கோப்புப் படம்
பகிர்:

கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 150 நாள்கள் வேலைவாய்ப்பை வழங்கும் 'வெற்றி 150' என்ற திட்டம் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தவெக அரசின் 2026 -2027 ஆம் நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரியவில்சன் பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அவர் பேசுகையில், "கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்கும் அரசின் கொள்கையை நிறைவேற்றும் நோக்கில், வெற்றி 150' என்ற முன்முயற்சியை அரசு செயல்படுத்தும்.

Advertisement

Advertisement

இதன் கீழ், 125 நாட்கள் வேலைவாய்ப்பை நிறைவு செய்துள்ள, நலிவுற்ற மற்றும் ஏழை, எளிய குடும்பங்களுக்குக் கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பை அரசு வழங்கும்.

இதன் மூலம், அந்தக் குடும்பங்களுக்கு மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது" என்று தெரிவித்தார்.

summary

150 days of rural employment guaranteed, Announcement in TN budget

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments